ராணுவ உளவு செயற்கைகோளை ஏவுவதில் ஏற்பட்ட குளறுபடி மிக மோசமான தோல்வி என வடகொரியா தெரிவித்துள்ளது.
மே 31 ஆம் தேதி செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் கடலில் விழுந்து முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில், கொரிய தொழிலாளர்கள் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், செயற்கைகோளை ஏவுவதில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து விரைவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
செயற்கைகோள் தோல்வியால் திட்டக்குழுவினரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்த வடகொரியா அதிபர், பொறுப்பற்ற முறையில் பணியாற்றியதாக சாடினார்.