அணை உடைப்பால் உக்ரைனின் கெர்சன் மாகாணத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப்பொருட்களை கொண்டு செல்ல ரஷ்ய படைகள் முட்டுக்கட்டை போடுவதாக ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது.
ஜூன் ஆறாம் தேதி, ரஷ்ய கட்டுப்பாடு பகுதியில் உள்ள கக்கோவா அணை உடைந்ததால் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
ரஷ்ய படைகள் அணையை தகர்த்ததாக உக்ரைனும், உக்ரைன் ராணுவம் அணையை தகர்த்ததாக ரஷ்யாவும் மாறிமாறி குற்றம்சாட்டிவருகின்றன. இதுவரை ரஷ்ய கட்டுப்பாடு பகுதியில் 29 பேரும், உக்ரைன் பகுதியில் 16 பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.