ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள தண்டே உயிரியல் பூங்காவில் வெயிலை எதிர்கொள்ள மான்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தண்டே உயிரியல் பூங்காவில் தற்போது 32 புள்ளி மான்கள் இருப்பதாகவும், அவற்றை வெப்பத்தில் இருந்து காக்க, அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டு வருவதாகவும் வனவிலங்கு மண்டல அலுவலர் தெரிவித்துள்ளார்.
சுட்டெரிக்கும் வெயிலில் மான்கள் நிம்மதியாக இளைப்பாற குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், குளுக்கோஸ், பழங்கள் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.