பொலிவியாவின் சாண்டா குரூஸ் மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள சோயா தோட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
சில நாட்களுக்கு முன் அங்கு கடும் பனிப்பொழிவு நிலவிய நிலையில் தற்போது பெய்துவரும் கனமழையால் கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத கிராம மக்களையும், அவர்களது கால்நடைகளையும் மீட்பு குழுவினர் படகில் வந்து அழைத்து சென்றனர். சுமார் 280 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.