ஆதாருடன், பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் காலக்கெடுவைத் தவறவிட வேண்டாம் என வருமான வரித்துறை நினைவூட்டி உள்ளது.
வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வருமான வரிச்சட்டத்தின் கீழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இதற்கு முன் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ள வருமான வரித்துறை, ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் பான் கார்டை ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இந்த கால அவகாசம் நிறைவடைய 2 வாரங்களே உள்ளதால், நினைவூட்டல் ட்விட்டர் பதிவை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதில், காலக்கெடுவைத் தவறவிட வேண்டாம் என்றும், தவறவிட்டால் ஜூலை 1 முதல் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலிழந்துவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.