குஜராத்தின் ஜக்காவ் துறைமுகம் அருகே நள்ளிரவில் கரையைக் கடந்த பிபர்ஜோய், அதிதீவிர புயல் என்ற நிலையில் இருந்து தீவிர புயலாக வலுவிழந்துள்ளது.
அந்த புயல் இன்று பிற்பகலில் மேலும் வலுவிழந்து புயலாகவும், பின்னர் மெள்ள நகர்ந்து சென்று மாலையில் தெற்கு ராஜஸ்தான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ராஜஸ்தானுக்குள் நுழைந்துள்ள பிபர்ஜோய் புயல் காரணமாக அங்கு பரவலாக கனமழை பெய்து வருகிறது.