ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி புகாரில் சிக்கிய முன்னாள் தலைமை காவலரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை கிண்டியை சேர்ந்த நிதி நிறுவனம் அதிகவட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் 6,000 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மோசடி செய்ததாக அதன் முகவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள நிறுவன இயக்குனர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தில் முக்கிய முகவராக செயல்பட்ட முன்னாள் தலைமைக் காவலரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹேமேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2000 முதலீட்டாளர்களிடம் இருந்து 550 கோடி ரூபாய் வரை வசூலித்துக் கொடுத்ததும், இதில் பல கோடி ரூபாய் கமிஷனாக கிடைத்ததால், தலைமைக் காவலர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு நிதி நிறுவனத்திலேயே முழுநேர முகவராக பணியாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.