தென்கொரிய அரசின் செலவில் கட்டப்பட்ட தகவல் தொடர்பு அலுவலகத்தை தகர்த்தமைக்காக வட கொரிய அரசிடம் 290 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தென்கொரியா வழக்கு தொடர்ந்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், தென்கொரிய அரசின் செலவில், வட கொரியாவின் கேசோங் நகரில் 48 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 2018 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தகவல் தொடர்பு அலுவலகத்தை இரண்டே ஆண்டுகளில் வடகொரிய அரசு வெடி வைத்து தகர்த்தது.
அதற்கு நஷ்ட ஈடாக 290 கோடி ரூபாய் கேட்டு தென்கொரிய அரசு சியோல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.