நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அண்டை நாடான நைஜரில் உள்ள குவாரா மாநிலத்தில் நடந்த திருமணத்திற்குச் சென்றவர்கள் படகில் சென்று திரும்பினர். அதிகாலை நேரத்தில் திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 100 பேர் வரை இறந்திருக்கக் கூடும் என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை என்றும் கூறிய அதிகாரிகள், குறிப்பிட்ட படகில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதால் விபத்து நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.