மத்தியப் பிரதேச மாநிலம் தலைநகரான போபாலில் சத்புர பவன் என்ற 6 மாடி அரசுக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடின. தீயை அணைக்க ராணுவம் அழைக்கப்பட்டது. மூன்றாவது மாடியிலிருந்து ஆறாவது மாடி வரை முழுவதும் தீயில் கருகின.
இதையடுத்து தீயை அணைக்க விமானப்படையின் உதவி கோரப்பட்டது. தொலைபேசி மூலம் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து ஏ.என்.32 என்ற விமானப்படை விமானம் மற்றும் எம் 15 ஹெலிகாப்டர் ஒன்று ஆகியவை நள்ளிரவில் அனுப்பி வைக்கப்பட்டன.
ஏசி சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. பல முக்கியமான அரசு கோப்புகள் மற்றும் உடைமைகள் இத்தீயில் கருகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை.