மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியாங்கா காந்தி தொடங்கினார்.
மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜபல்பூர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நர்மதைக் கரையில் பிரியங்கா வழிபாடு செய்தார்.
இதைத்தொடர்ந்து கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பின்றி உள்ளதாக கூறினார். மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்கி தேர்தல்களில் வெல்லும் பா.ஜ.க., அதனை நிறைவேற்றுவதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.