உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்சினைக்கு அமைதி தீர்வு காணும் முயற்சியில் பிரிக்ஸ் ஈடுபட்டிருப்பதாக அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் தென்னாப்பிரிக்கா தெரிவித்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் அந்த அமைப்புக்கு, சுழற்சி அடிப்படையில் விரைவில் தென்னாப்பிரிக்க தலைமை வகிக்கவுள்ளது.
இந்நிலையில், பிரிக்ஸுக்கான தென்னாப்பிரிக்க பிரதிநிதி அனில் சுக்லால் அளித்த பேட்டியில், உக்ரைன் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதில் பிரிக்ஸ் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
விரைவில் தென்னாப்பிரிக்க அதிபர் ராம்போசா உள்ளிட்ட 6 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு நேரில் சென்று பேச்சு நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.