பெருவில், இதுவரை இல்லாத வகையில், இந்தாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில், 200 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திறந்த கண்டெய்னர்களில் தண்ணீரை சேகரித்து வைக்க வேண்டாம் என்று பெரு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
பலத்த மழை பெய்து வரும் சூழலில் டெங்கு பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தேங்கிய நல்ல நீரில், டெங்கு கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.