பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட நெருப்பு குழம்பிலிருந்து நச்சுவாயு மற்றும் புகை வெளியேறி வருவதால் அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மத்திய மாகாணமான அல்பேயில் உள்ள மயோன் மலையிலிருந்து சூடான பாறைகள் விழுவதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மயோன் மலைப்பகுதியில் உள்ள 24 எரிமலைகளில் ஒரு எரிமலை சனிக்கிழமை வெடித்த போது சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் பாறைகள் விழுந்தன. சல்பர் டை ஆக்சைடு உமிழ்வு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, எரிமலை வெடிப்புகளுக்கு விடப்படும் உச்சபட்ச எச்சரிக்கையான 5ம் நிலையில் தற்போது 3 ஆவது படி நிலை எச்சரிக்கையை அரசு அறிவித்துள்ளது.