உலகில் எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும் இந்திய மக்கள் தாய் நாடு மீது முழுமையாக நம்பிக்கை வைக்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வாரணாசி சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அங்குள்ள பல்கலைக்கழகத்தில், இந்திய வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்கள் மற்றும் அம்சங்கள் குறித்த கருத்தரங்கில் பேசினார்.
வெளிநாடுகளில் நெருக்கடி காலங்களில் சிக்கிய இந்தியர்கள், தாய்நாட்டிற்கு மீட்கப்பட்டு வந்தது குறித்து எடுத்துரைத்தார். ரஷ்யா-உக்ரைன் போரின் தொடக்கத்தில், உக்ரைனிலிருந்து 90 விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்துவரப்பட்டதாகவும், சூடான் உள்நாட்டுப் போரையடுத்து ஆபரேஷன் காவேரி மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும் கூறினார்.
நேபாள நிலநடுக்கம் மற்றும் மியான்மர் புயலின்போது இந்தியா மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.