ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட கும்பலால் சிறை பிடிக்கப்பட்ட துருக்கி நாட்டு சரக்கு கப்பலை இத்தாலி பாதுகாப்பு படையினர் அதிரடியாக மீட்டனர்.
சிரியா, ஆப்கான், ஈரான் நாடுகளைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 15 பேர் கும்பல், துருக்கியிலிருந்து பிரான்ஸ் சென்ற சரக்கு கப்பலில் யாருக்கும் தெரியாமல் ஏறிக்கொண்டனர்.
நடுக்கடலில் அவர்களை மாலுமிகள் கவனித்த போது, கத்தி முனையில் சிறை பிடித்தனர். சிசிடிவி-யில் இதனை கவனித்த கேப்டன், எஞ்சின் அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக்கொண்டு துருக்கிக்கு தகவல் அளித்துள்ளார்.
துருக்கி அரசாங்கம் உதவி கோரியதன் பேரில் 2 ஹெலிகாப்டர்களில் விரைந்த இத்தாலி பாதுகாப்பு படையினர், அந்த கும்பலை கைது செய்து சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மாலுமிகளையும் மீட்டனர்.