ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள BCCL நிறுவனத்தின் திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பௌரா கோலிரி பகுதிக்கு உட்பட்ட இடத்தில் சுரங்கம் உள்ளதாகவும், அங்கு சட்ட விரோத சுரங்க பணி நடைபெறுவதாக சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.