எகிப்தின் ஹுர்காடா கடற்கரையில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவரை, சுறா ஒன்று தாக்கிக் கொன்றது.
செங்கடல் ரிசார்ட் கடற்பகுதியில் சிலர் படகுகளில் பயணம் செய்துக் கொண்டிருந்த சமயத்தில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர், கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டைகர் சுறா, திடீரென அவரை தாக்கிக் கொன்றது. இதைக் கண்டு படகில் இருந்தவர்கள் கத்திக் கூச்சலிட்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள பல கடற்கரைகளில் நீச்சல் மற்றும் பிற விளையாட்டு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.