டிரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் போதைப் பொருள்களை அனுப்புவதை தடுத்து நிறுத்த அந்நாட்டின் மீது மேலும் ஒன்று அல்லது 2 துல்லியத் தாக்குதல்களை இந்தியா நடத்த வேண்டுமென்று பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்துக்குள் ஊடுருவும் பாகிஸ்தான் டிரோன்களை சுட்டுவீழ்த்தி, அதிலிருக்கும் போதைப் பொருள்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பன்வாரிலால் புரோஹித், அடுத்த தலைமுறையினர் போதைக்கு அடிமையாகாமல் தடுக்க எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் இந்தியா எடுக்கலாம் என்றும், பாகிஸ்தான் இந்தியாவிடம் வாலாட்டினால், அந்நாட்டுக்கு எதிராக துல்லியத் தாக்குதல்களை நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.