உக்ரைனில் கக்கோவ்கா அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளம் 600 சதுர கிலோமீட்டருக்கு மேல் சூழ்ந்துள்ளது.
கெர்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் ஐந்தரை மீட்டர் உயரத்துக்கு சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன.
ரப்பர் படகுகள் மற்றும் தண்ணீரில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில்சென்று ஆய்வு மேற்கொண்ட அதிபர் ஜெலன்ஸ்கி, அதிகாரிகளுடன் அவசரகால நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.