மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபடும் பழங்குடியின மக்களுக்கு ஆயுதங்கள் வெளியில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் தொடரும் வன்முறையை அடுத்து, மத்திய அரசு மணிப்பூர் அரசுடன் சஸ்பென்ஷன் ஆஃப் ஆபரேஷன்ஸ் (Suspension of Operations) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்நிலையில் தொடரும் வன்முறையை அடுத்து குக்கி போராளிக் குழுக்களின் முகாம்களில் ஆயுதத் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
அப்போது சரணடைந்தவர்கள் ஒப்படைத்த அதி நவீன ஆயுதங்கள் மாயமானதாகக் கூறப்பட்டது.
ஆனால் தணிக்கையில் ஓரிரண்டு ஆயுதங்கள் மட்டுமே காணாமல் போனதாகக் தெரிவிக்கப்பட்ட நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு மியான்மரில் இருந்து ஆயுதங்கள் வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.