உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள அணை தகர்க்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் அமைந்துள்ள கக்கோவ்கா அணையை உக்ரைன் படைகள் தகர்த்ததாக ரஷ்யாவும், ரஷ்ய படைகள் தாக்கி அழித்ததாக உக்ரைனும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றன.
அணையில் இருந்து வெளியேறிய பல மில்லியன் கன அடி தண்ணீரால் 24 கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ரப்பர் படகுகள் மற்றும் தண்ணீரில் செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.