சென்னை அம்பத்தூர் ஆவினில் சிறார்கள் பணியமர்த்தப்படவில்லையென பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நந்தனம் ஆவின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சிறார்கள் வேலை செய்ததாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்தியதாகவும், அந்த தகவல் உண்மையில்லை எனவும் விளக்கம் அளித்தார். சிறார்களை தவறாக பயன்படுத்தி ஆவின் நிறுவனத்திற்கு எதிராக போராட தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆவின் பால் பண்ணைகளில் தொடர்ந்து நடத்தப்படும் ஆய்வுகளின் படியே வேலூர் சத்துவாச்சாரியில் ஆய்வு நடத்தி ஒரே பதிவு எண்ணில் 2 வாகனங்கள் முறைகேடாக இயக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.