சென்னை மீனம்பாக்கம் அருகே ஆட்டோவின் முன்பகுதியில் அமர்ந்து பயணித்த பெண் தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்து அதே ஆட்டோவின் பின்சக்கரம் ஏறி உயிரிழந்தார்.
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 32 வயதான ரம்யா தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருடன் மேல்மலையனூர் சென்று விட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் பயணித்ததால் ரம்யா ஓட்டுநரோடு இருக்கையில் அமர்ந்ததாக தெரிகிறது. விமான நிலையம் அருகே வந்த போது ஆட்டோவிலிருந்து கீழே விழுந்தவரின் மீது அதே ஆட்டோவின் பின்சக்கரம் ஏறியது. கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் பக்கவாட்டு சுவற்றில் மோதி விபத்திற்குள்ளானது.