அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மின் உற்பத்தி ஆலையின் புகைபோக்கிகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.
ஸ்பிரிங்க்டேல் பகுதியில் செஸ்விக் ஜெரேட்டிங் ஸ்டேஷன் என்ற, மின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆலை மூடப்பட்ட நிலையில், செயல்படாமல் இருந்த புகைப்போக்கிகளை கடந்த 2ம் தேதி அந்நிறுவனமே வெடிவைத்து தகர்த்தது. பலத்த சத்தத்துடன் 2 புகைப்போக்கிகளும் அடுத்தடுத்து கீழே விழுந்து நொறுங்கியதில், பெரும் புழுதி கிளம்பியது.