அமெரிக்காவில் உள்ள தங்கள் நாட்டுக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஓட்டலை நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் அரசு 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 100 ஆண்டுகள் பழமையான, ஆயிரத்து 250 அறைகள் கொண்ட ஓட்டல், 220 மில்லியன் டாலருக்கு குத்தகை விடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கவாஜா சாத் ரபீக் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அரசுக்கு ஆயிரத்து 817 கோடி வருவாய் கிடைக்கும் என்றும், 3 ஆண்டுகள் குத்தகை முடிந்ததும், பாகிஸ்தான் அரசிடம் ஓட்டல் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.