உக்ரைன் அணுஉலைக்கு நீர் வழங்கும் அணை உடைக்கப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என அஞ்சி ஆயிரக்கணக்கானோர் ஊரை விட்டு வெளியேறினர்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் தெற்குப் பகுதியின் சோவியத் கால அணையில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஆபத்தான பகுதியில் இருந்து சுமார் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
அணையை சேதப்படுத்தியதாக ரஷ்யாவும் உக்ரைனும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர்.அணையில் இருந்து பெருமளவுக்கு வெள்ளம் வெளியேறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.