எகிப்தில் 13ம் நூற்றாண்டு கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அல்-சாஹிர் பேபர்ஸ் மசூதி, புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 1268ம் ஆண்டு கெய்ரோவில் 3 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த மசூதி, எகிப்தின் மூன்றாவது பெரிய மசூதியாக பார்க்கப்பட்டது.
பின்னர், பல்வேறு ஆட்சிக் காலங்களில் இராணுவக் கோட்டையாகவும், சோப்பு தொழிற்சாலையாகவும், இறைச்சிக் கூடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதன் பிறகு, 225 ஆண்டுகளாக கைவிடப்பட்ட இந்த மசூதி சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், சுமார் 7.69 மில்லியன் டாலர்கள் செலவில் 16 ஆண்டு காலமாக மறுசீரமைக்கப்பட்டு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.