பாகிஸ்தானின் பணவீக்கம் இலங்கையை விட அதிகமாக கடந்த மாதம் 38 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால் ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அண்டை நாடுகளிடமிருந்து சரக்குகளை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் வர்த்தக அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.