பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக எம்பி பிரிஜ் பூஷணை வரும் 9 ம் தேதிக்குள் கைது செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக காப் மகாபஞ்சாயத் என்றழைக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையடுத்து மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கத்தினர் கெடு விதித்துள்ளனர். மல்யுத்த வீராங்கனைகள் 6 பேரின் புகாரால் பிரிஜ் பூஷணுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.