தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவி தொகையாக 2 ஆயிரம் ரூபாய், 25 வயது வரை உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய், டிப்ளமோ படித்தவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை ஆயிரத்து 500 ரூபாய் ஆகியவற்றை வழங்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி ஆகிய திட்டங்களை செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் இந்த நிதியாண்டிலேயே செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.