சீனாவின் லியோனிங் மாகாணத்தில்கடுமையான சூறாவளி தாக்கியது. பெரும் வேகத்துடன் காற்று சுழன்றடித்ததில், விளைநிலங்களில் இருந்து பயிர்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதம் அடைந்தன.
சூறாவளி தாக்குதலையடுத்து, தீயணைப்பு, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் பொதுப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சூறாவளியால் சுமார் 100 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.