ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் சேவைகளை உக்ரைனுக்காகப் பெறுவதற்கு பாதுகாப்பு துறை ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
உக்ரைனின் தகவல் தொடர்பு திறன்களை உறுதி செய்வதற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் உக்ரைனின் தகவல் தொடர்பு வலையமைப்பில் சாட்டிலைட் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால் ஸ்டார் லிங்க் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
ஸ்டார் லிங்கை உக்ரைனிய ராணுவத்தினர் போர்களத்தில் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தியபோது அதனைத் தடுக்க ரஷ்யா முயற்சித்ததாக பென்டகன் குற்றம் சாட்டியுள்ளது.