டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் விரைவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாறும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அட்லாண்டா விமான நிலையத்தை விட, மிகப்பெரிய விமான நிலையமாக மாறும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது, டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தற்போது ஆண்டுக்கு 70 மில்லியன் பயணிகள் வந்து செல்வதாகவும் மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 109 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் கூறினார்.
மூன்று ஓடு பாதைகளைக் கொண்ட ஒரே இந்திய விமான நிலையம் இதுவாகும்.டெல்லியின் புதிய ஓடுபாதை மற்றும் நான்காவது ஓடுபாதை செப்டம்பரில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.