பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்களுடன் இந்திய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் ஒன்றை அமிர்தசரஸ் அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த மூன்று கிலோ 200 கிராம் உயர்ரக ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவரிடம் டிரோன் மூலமாக போதைப் பொருள் கடத்தலின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.