கீவ் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், நள்ளிரவு கீவ் நகரில் ரஷ்யா சரமாரியாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.
ஆண்டுதோறும் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கீவ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கீவ் தினத்தை கொண்டாடும் வகையில் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தலைநகர் கீவில் நள்ளிரவுக்கு பிறகு நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில், ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவின் 20 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.