பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, சிறுவன் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும், பகர்வால்கள் என்றழைக்கப்படும் உள்ளூர் மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு பொருத்தமான மேய்ச்சல் நிலங்களைத் தேடியும், கடுமையான வானிலை நிலைமைகளை தவிர்ப்பதற்காகவும் தங்கள் மந்தைகளுடன் இடம்பெயர்கின்றனர்.
கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைக்கும் ஷௌண்டர் கணவாய் அருகே காஷ்மீரில் இருந்து ஆட்டுமந்தைகளுடன் திரும்பிக்கொண்டிருந்த 35 பேர் பள்ளத்தாக்கிற்கு அருகே முகாமிட்டிருந்தனர்.
அப்போது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு சிக்கிக் கொண்டனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாகவும், பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், 15 கால்நடைகளும் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.