புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகார ரத்து விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் பணிக்கு போதிய மூத்த மருத்துவர்கள் இல்லாதது மற்றும் சி.சி.டி.வி., கேமரா இல்லாதது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, இந்திய மருத்துவ கவுன்சில், 2023-24ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். பல்வேறு உயர் கல்விகளுக்கான அங்கீகாரங்களை பெரும் சிரமங்களுக்கிடையே பெற்றுள்ளனர் என்றும் சிறு காரணங்களுக்காக அந்த அங்கீகாரத்தை இழக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
மருத்துவக் கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்து இந்தாண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் ஆளுநர் தமிழிசை கூறினார்.