அமெரிக்காவில் கொலை முயற்சி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த நபரை 33 ஆண்டுகள் கழித்து குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
1990 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் கட்டிட தொழிலாளியான டேனியல் சல்டானா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது 22 வயதான டேனியலுக்கு 45 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கின் குற்றவாளி ஒருவர், பரோல் கோரி விண்ணப்பித்த போது, அந்த சம்பவம் நடைபெற்ற போது டேனியல் அந்த இடத்திலேயே இல்லை என தெரிவித்தார். இதன் காரணமாக உண்மை கண்டறியப்பட்டு டேனியல் விடுதலை செய்யப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் சிறையில் கண்விழிக்கும்போதும் நிரபராதியான தனக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை நினைத்து வருந்தியதாகவும், தற்போது குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் டேனியல் தெரிவித்துள்ளார்.