சென்னை திருவல்லிக்கேனியில், புகையிலை பொருளான ஹான்ஸ் கேட்டு தகராறில் ஈடுபட்டு, பெட்டிக் கடையை உடைத்து சூறையாடிய போதை ஆசாமிகள் இருவரை சிசிடிவி காட்சிகளின்படி போலீசார் கைது செய்தனர்.
கெனால் பேங்க் சாலையைச் சேர்ந்தவர் பொன்னி, அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 17 ம் தேதி, இவரது கடைக்கு வந்த மர்மநபர்கள் 'ஹான்ஸ்' கேட்டுள்ளனர்.
அதற்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்வதில்லை என பொன்னி தெரிவித்ததால், ஆத்திரமடைந்த இருவரும் கத்திமுனையில், கடையை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த தனுஷ் மற்றும் வசந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.