இந்தியப் போர்க்கப்பலான விக்ராந்த்தில் இரவு நேரத்தில் முதன்முறையாக மிக் 29 கே விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இந்தியக் கடற்படையின் திறமை, தொழில்நேர்த்தி மற்றும் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலின் குழுவினரின் ஆற்றலை இந்த பரிசோதனை வெளிப்படுத்தி இருப்பதாக கடற்படையின் செய்தித்தொடர்பாளர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அரேபியக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த விக்ராந்த் கப்பலில் இரவு வேளையில் மிக் 29 கே விமானம் தரையிறங்கியதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.