ராணுவ நிலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா அனுப்பிய ஈரானிய தயாரிப்பு 36 டிரோன்களை ஒரே நாள் இரவில் சுட்டுவீழ்த்தி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
மேலும் தலைநகர் கீவின் வான்பரப்பில் பறந்த டிரோன்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சிகளையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது. அக்காட்சியில், டிரோன்கள் தாக்குதலுக்கு ஆளாகி தீப்பிழம்பாய் விழும் காட்சிகள் உள்ளன.