இந்தோனேசியாவின் மெராபி எரிமலை மீண்டும் வெடித்துச் சிதற தொடங்கி உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 9 ஆயிரத்து 721 அடி உயரத்தில் உள்ள இந்த எரிமலை வெடித்து வெடித்து சிதறியதில், அடர் சாம்பலுடன் 2 கிலோ மீட்டர் உயரத்திற்கு நெருப்பு குழம்பு வெளியேறியது.
எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள பகுதிகளை போர்வைபோல் போர்த்தி உள்ளது.
மெராபி எரிமலை கடந்த 2010ஆம் ஆண்டு வெடித்தபோது, 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.