இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது புகார் அளித்த மல்யுத்த வீராங்கனைகள் அனைவரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என தெரிவித்துள்ளனர்.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள் அவரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வலியுறுத்தி வந்தனர்.
இதனை ஏற்ற பிரிஜ் பூஷண், தம்மைப் போல வீராங்கனை வினேஷ் போகத்தையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வினேஷ் போகத் மட்டுமின்றி புகார் தெரிவித்த அனைத்து மல்யுத்த வீராங்கனைகளும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என தெரிவித்துள்ளனர்.