ஆஸ்திரேலியாவில் இரவு வானை ஒளிரச் செய்யும் வகையில், குயின்ஸ்லாந்து மாகாணம் கெய்ன்ஸ் விமான நிலையம் அருகே விண்கல் ஒன்று விழுந்தது.
விண்கல் விழுந்தபோது, விமான நிலையம் அருகே உள்ள சிறிய மலைப்பகுதியின் பின்புறம் மின்னல் வெட்டியதுபோல பிரம்மாண்ட ஒளிப்பிழம்பு தோன்றியது.
விமான நிலைய கார் நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், விண்கல் விழும் 16 நிமிட காட்சி பதிவாகியுள்ளது.