தென் அமெரிக்க நாடான கயானாவில், மேல்நிலைப்பள்ளி விடுதியொன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
மஹ்தியாவிலுள்ள மேல்நிலை பள்ளியின் மாணவர் விடுதியின் படுக்கை அறையில் ஞாயிற்றுகிழமை நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு தங்கியிருந்த மாணவர்கள் பலர் தீப்பிடித்த அறையில் சிக்கிக் கொண்டனர்.
தீக்காயங்களுடன் பலர் வெளியே குதித்து உயிர்தப்பிய நிலையில், மாணவ-மாணவிகள் உட்பட 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.