உலகின் இயக்கவியலையே குவாட் மாற்றியமைத்து விட்டதாக அடுத்த 20 30 ஆண்டுகளில் மக்கள் கூறும் நிலை உருவாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற குவாட் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
சுதந்திரமான பாதுகாப்பான வெளிப்படையான இந்தோ பசிபிக் பிராந்தியம் என்பதே இங்குள்ள அனைவரின் பொது இலக்காக இருப்பதாகவும், உலகின் எதிர்காலம் இந்தோ பசிபிக்கில் எழுதப்படும் என்றும் ஜோபைடன் குறிப்பிட்டார்.