ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 9 வயது சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி விடுமுறைக்காக போஜ்புரா கிராமத்தில் உள்ள மாமா வீட்டிற்கு சென்ற அந்த சிறுவன், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான்.
கிராம மக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவனை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.