கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி போராட்டம் நடத்தியது.
முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு கேரளாவில் இரண்டாம் முறையாக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்நிலையில், பினராயி விஜயன் அரசில், ஊழல் பெருகிவிட்டதாகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாகவும், விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன.