பி.இ., பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட ஒரு மாதம் முன்கூட்டியே ஜூலை 2ஆம் தேதி அன்று தொடங்கும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, ஜூலை 2 முதல் 6 ஆம் தேதி வரை விளையாட்டு வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என்றும், ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும் என்றும் கூறினார்.
163 அரசு கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இம்மாதம் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் கூறினார்.
500-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர சனிக்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.